கடகடவென ஒரே மாதத்தில் குண்டாக மாற வேண்டுமா? நீங்களும் செய்து பாருங்க முட்டை வைத்தியம்!
பொதுவாக முட்டையில் நாம் நினைத்து பார்க்க முடியாதளவு ப்ரோட்டின்கள் அடங்கியுள்ளது. இது உடலிலுள்ள தசைகள் மற்றும் உடல் வளர்ச்சி என்பவற்றின் வளர்ச்சிக்கு பாரிய பங்கு வகிக்கிறது.
மேலும் உடலின் பருமனை அதிகரிக்க வேண்டும் என்று முயற்சியெடுப்பவர்கள் தினமும் ஐந்து முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆராய்ச்சியில் நிபித்துள்ளார்கள்.
இதன்படி, மனித உடலின் அனைத்து விதமான வளர்ச்சிக்கும் புரதச்சத்து முக்கிய இடத்தை பிடிக்கிறது.
இப்புரதச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் முட்டையில் நாம் நினைத்து பார்க்க முடியாதளவு நிறைந்து காணப்படுகிறது.
அந்த வகையில் புரதச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
மனிதனுக்கு தேவைப்படும் கலோரிகள்
ஒரு ஆணுக்கு நாளொன்றுக்கு 56 கிராம் புரதமும், ஒரு பெண்ணுக்கு 46 கிராம் புரதமும் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அளவில் புரதம் கிடைக்காவிட்டால் உடல் சோர்வு, மயக்கம், உடல் எடை குறைவு மற்றும் முடி உதிர்வு என பல நோய்களை உண்டுபண்ணுகிறது.
மேலும் புரதச்சத்து சரியாக கிடைக்காவிட்டால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். உதாரணமாக எலும்பு தேய்மானம், கால் வலி, தசைகளில் வலி போன்றவைகள் ஏற்படும்.
தொடர்ந்து கல்லீரலிலும் பிரச்சினை ஏற்படுத்தும்.
முட்டையில் இருக்கும் புரதம் மற்றும் கலோரிகளின் அளவு
ஒரு சிறிய முட்டையில் 55 கலோரிகள் இருக்கிறது. மேலும் நன்றாக வளர்ந்த ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிகள் உள்ளது. இவை இரண்டிலும் இல்லாமல் நடுத்தரமான முட்டையில் 66 கலோரிகளும் உள்ளது.
இதனை தொடர்ந்து ஒரு முட்டையில் 6 -7 கிராம் புரதம் சத்து உள்ளது. ஒரு சிறிய முட்டையில் 4.79 கிராம் புரதம் உள்ளது. இவையிரண்டிற்கும் இடையில் இருக்கும் நடுத்தர முட்டையில் 5.54 கிராம் புரதம் உள்ளது.
மேலும் ஒரு முட்டையில் வெள்ளை கருவில் 3.6 கிராம் புரதமும், மஞ்சள் கருவில் 2.7 கிராம் புரதமும் உள்ளது. முக்கிய குறிப்பு ஒரு நாளைக்கு குறைந்தது 3 முட்டைகள் வீதம் எடுத்துக் கொண்டால் புரதச்சத்து குறைபாடு ஏற்படாமல் கட்டுபடுத்தலாம்.