இரண்டு மருமகள்களையும் குடும்பத்துடன் சேர்த்து கொண்ட ஈஸ்வரி- கோபிக்கு இது தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, ராதிகா இருவரையும் தன்னுடைய மருமகள்களாக ஈஸ்வரி இணைத்து கொண்டது போன்ற காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் 1000 எபிசோட்களை கடந்து, 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் கணவனை இழந்த பெண்ணொருவர் தன்னுடைய குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார். எப்படி உழைக்கிறார் என்பதனை கருவாக கொண்டு கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனை தொடர்ந்து தற்போது பல போராட்டங்களுக்கு பின்னர் கோபி, பாக்கியாவின் நிலையை புரிந்து கொள்கிறார்.
தற்போது பாக்கியா மற்றும் மனைவி ராதிகாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். ஈஸ்வரியும் கோபிக்காக ராதிகாவை பாக்கியா வீட்டில் இருப்பதற்கு அனுமதிக்கிறார். ஆனால் ஈஸ்வரி, ராதிகா மற்றும் மயூவை வீட்டில் வைத்து கொண்டு தினம் தினம் காயப்படுத்தி வருகிறார்.
மருமகளை சேர்த்து கொண்ட ஈஸ்வரி
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாக்கியா, ராதிகா- ஈஸ்வரி இருவரும் ஒன்றாக இணைந்து ரீல்ஸ் செய்யும் காணொளியை பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள், “இந்த விடயம் கோபிக்கு தெரியுமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |