சீரியலாக இருந்தாலும் இப்படியா? மறுபடியும் பாக்கியாவுடன் கைக்கோர்க்கும் கோபி
பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சில எபிசோட்களில் நிறைவுக்கு வர இருப்பதால் பாக்கியாவும் கோபியும் மறுபடியும் இணைந்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு அவரின் முன்னாள் காதலியான ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். அப்போது ராதிகாவிற்கு மயூ என்ற பெண் குழந்தையும் இருந்தது.
ராதிகாவின் அதிரடி முடிவு
இந்த நிலையில், ராதிகாவுடன் தனியாக பாக்கியா வீட்டிற்கு முன்னாள் ஒரு வீடு வாங்கி குடியிருந்தார். ஆனால் கோபி என்ன தான் இன்னொரு வாழ்க்கைக்கு சென்றிருந்தாலும் பாக்கியாவையும் அவரின் குடும்பத்தினரையும் பிரிந்து இருக்க முடியாது என ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டார்.
இந்த விடயம் ராதிகாவிற்கு ஆரம்பத்தில் இருந்து புரிந்தாலும் கோபிக்காக பொறுத்து கொண்டார். அவருக்கும் காலப்போக்கில் கோபியின் மாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் விவாகரத்து கொடுத்து விட்டு மறுபடியும் தனியாக சென்று விட்டார்.
பல அடிகளை தாங்கிய ராதிகா மயூயுடன் தனியாக வாழ்வதே மேல் என முடிவெடுத்து விட்டார். தற்போது தனியாக அவருடைய அம்மா, மயூவுடன் இருக்கிறார். அதே சமயம் கோபியும் எங்கு போவது என தெரியாமல் ஈஸ்வரியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்கி விட்டார்.
கோபியுடன் கைக்கோர்க்கும் பாக்கியா
இந்த கதை இன்னும் சில எபிசோட்களில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது. கோபியுடன் என்ன நடந்தாலும் சேர மாட்டேன் என பாக்கியாவும் ஒரு முடிவுடன் இருக்கிறார்.
இப்படியொரு சமயத்தில் கோபியுடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பாக்கியா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “மீண்டும் கோபியுடன் சேர்ந்து விட்டீர்களா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |