பாக்கியாவிற்கு நடக்கும் மறுமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா?
கோபி- பாக்கியா இருவருக்கும் மறுமணம் செய்து வைக்க ஈஸ்வரி திட்டம் போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு அவரின் முன்னாள் காதலியான ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். அப்போது ராதிகாவிற்கு மயூ என்ற பெண் குழந்தையும் இருந்தது. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
ராதிகா - கோபியுடன் வாழ முடியாது என விவாகரத்து கொடுத்து விட்டார். தற்போது பாக்கியா வீட்டில் ஈஸ்வரி தயவில் கோபி இருந்து வருகிறார்.
அவர் இல்லாத காலத்தில் கோபி எங்கு செல்வார் என பயந்த ஈஸ்வரி, கோபி- பாக்கியா இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விடலாம் என திட்டம் போட்டு கோபியிடம் பேசுகிறார்.
பாக்கியாவிற்கு மறுமணமா?
இந்த நிலையில், கோபியிடம் ஈஸ்வரி, “உனக்கு பாக்கியாவுடன் சேர்ந்து வாழ விருப்பமா?” என கேட்க, அவரும், “சரி” என்பது போல் பதில் கொடுத்து விட்டார். ஈஸ்வரி மகன் சரி சொன்ன குஷியில் செழியன்- எழில் இருவரையும் கோயிலுக்கு வரவழைத்து கோபி- பாக்கியா இருவருக்கும் மறுமணம் செய்து வைக்கப்போவதாக கூறுகிறார்.
அதற்கு எழில், “ அம்மாவுக்கு மறுமணம் செய்வது என்றால் வேறு யாருக்காவது செய்து வைங்க.. அப்பாவுடன் மறுமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை..” எனக் கூறி விடுகிறார்.
எழில் இப்படி கூறியதை கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரிக்கு என்ன செய்வது என தெரியவில்லை. இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “மீண்டும் கோபியுடன் சேர்ந்து விடுவீர்களா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |