காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகள்- அறிகுறிகளுடன் தெரிஞ்சிக்கோங்க
"எங்கும் குப்பை, எதிலும் குப்பை.." என்ற வாசகத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இது நம்முடைய வாழ்வியலுடன் கலந்த ஒரு வாசகம் என்பதால் பலரும் அறிந்திருப்பார்கள். சுகாதாரத்தை அள்ளிக் கொடுக்கும் இயற்கை நமக்குத் தெரிந்தே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக, மனிதர்களால் மிக வேகமாக அசுத்தப்படுத்தப்படும் தண்ணீர், காற்று ஆகிய இரண்டும் பல நோய்களை மனிதர்களுக்குள் கொண்டு வரும் முக்கிய காரணிகளாகும்.
இதற்கு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்த காற்று மாசுப்பாட்டை உதாரணமாக கூறலாம்.
காற்றின் தரத்தை அளக்கும் “ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்” (AQI) கணக்குப்படி, காற்று மாசு 400 என்ற அளவையும் தாண்டியுள்ளது. இந்த அளவு 150-ஐத் தாண்டினாலே உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும். 400 என்பது, அபாயகரமான சூழலாகும்.
இப்படியான ஒரு நிலை உயிரினங்களின் அத்தியாவசியமான காற்றை நஞ்சாக்கிய சூழலாகும். ஓடும் நீர்வழிகளை மறைத்து அதில் கட்டடங்கள் கட்டுவது, பிளாஸ்டிக் பயன்பாடு, மிக அதிகமாக வெளியாகும் வாகனப்புகை ஆகிய காரணிகளால் காற்று மாசுப்பாடு அதிகரிக்கிறது.
அந்த வகையில் காற்று மாசுப்பாடு காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
காற்று மாசுப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
1. தற்போது நிலவிய வரும் மோசமான பழக்கங்களால் பெரும்பாலான இறப்புகள், சுவாசப் பிரச்சனை பதிவாகி வருகின்றன. அமெரிக்காவில், இதயம் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களால் இறப்பவர்களுக்கு சுவாசப் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிய அளவில் 65 சதவிகித இறப்பும், இந்திய அளவில் 25 சதவிகித இறப்பும் காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன.
2. உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி, ஓர் ஆண்டுக்கு 4.6 மில்லியன் (46 லட்சம்) பேர் சுவாசப் பிரச்சனை காரணமாக மரணமடைகிறார்கள். அதில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 5,27,700 மக்கள் மரணமடைகிறார்கள. 80 சதவிகித நுரையீரல் பாதிப்புகளுக்கு ஆளாகுகிறார்கள். கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் வெளியிடும் புகை தான் இதற்கு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. கடந்த 2015-ம் ஆண்டு “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழ் நடத்திய ஆய்வு முடிவின்படி, நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வருடமும், வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 2015-ன் கணக்குப்படி, 29.83 லட்ச வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில், 22.5 லட்சம் இருசக்கர வாகனங்கள், 5.26 லட்சம் கார்கள், 45,500 ஆட்டோ-ரிக்ஷாக்கள், 67,000 வேன்கள் உள்ளடங்கும்.
4. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி உலகளவில் அதிகம் மாசு நிறைந்த நகரங்களில், 13 முதல் 20 வரையிலான நகரங்கள் இந்தியாவில் தான் இருக்கின்றன.
5.இந்தியா - டெல்லியில் இருக்கும் 50% குழந்தைகள், நுரையீரல் சார்ந்த வாழ்நாள் பாதிப்புகளால் அவஸ்தைப்படுகிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் (Health Effects Institute) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 1990 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், நுரையீரல் பிரச்சனையால் இறப்பு வீதம் ஏறத்தாழ 150 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
நிபுணரின் விளக்கம்
இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பிரச்சினையாக சுற்றுச்சூழல் சீர்கேடு பார்க்கப்படுகிறது. காற்று மாசுப்பாடுகள் அதிகரிப்பதற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக அமைகிறது.
சில வளர்ந்த நாடுகளில் நான்கு சக்கர வாகனம் வாங்குவதே கடினம். ஆனால், இந்தியாவிலோ வீட்டுக்கொரு வாகனம் இருக்கிறது. இதனால் உயர்தர எரிபொருள்கள் (குறைந்தளவு கார்பன்-மோனாக்ஸைடை வெளியிடும்) நமக்குக் கிடைப்பதில்லை.
தரத்தில் குறைந்த எரிபொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் போது, காற்றில் நஞ்சு அதிகமாக கலந்து நமது சுவாசத்திற்குள் செல்கிறது. இதனால் தான் உடல்நல பாதிப்புகள் அதிகமாகியுள்ளது.
பனிக்காலத்தை விட கோடைகாலத்தில் வாகன புகையின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஏனெனின் பனிக்காலத்தில், சரியான காற்றோட்டம் இல்லாமல் இருக்கும். இதனால் நச்சுக்காற்று பல மணிநேரங்களுக்கு மேலெழ முடியாமல், நமக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.
கோடைகாலத்தில், வாகனப் புகைகளோடு சேர்த்து, வறண்ட பகுதிகளும் நச்சுக்காற்றை உமிழும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நுரையீரல், மூச்சுக்குழாய் ஆகிய பகுதிகளில் தொற்றுக்களை ஏற்படுத்தும். இதன் விளைவாக, கட்டி, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு (Lung Attack), இதய பாதிப்புகள், நுரையீரல் புற்றுநோய், சுவாச பாதிப்புகள், மூக்கில் இருக்கும் நுகர்வுத்திறன் குறைவது உள்ளிட்ட நோய்கள் வருகின்றன.
இறப்பை ஏற்படுத்தும் நோய்களில், இதயநோய் மற்றும் புற்றுநோய்களுக்கு அடுத்த இடத்தை சுவாசக் கோளாறுகள் பிடித்துள்ளன. காற்று மாசுப்பாடு காரணமாக உடல்நல பாதிப்புகள் மட்டுமல்லாமல் இயற்கை அழிவுகளும் ஏற்படுகின்றன. காற்று மாசுப்பாடு அதிகரித்து கொண்டே சென்றால் அமில மழை (Acid rain) ஏற்பட்டு, கடும் நீர் பஞ்சம் ஏற்படும், மாசு கலந்த நீர் தான் காலப்போக்கில் கிடைக்கும்..” என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காற்று மாசுப்படுவதை தடுப்பது எப்படி?
- தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலைகள் வெளியிடும் புகை ஆகியவை ஆபத்தானவை, எனவே அங்கு வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் கொடுக்க வேண்டும். பணிபுரியும் இடங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும். இவை புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து எம்மை பாதுகாக்கும்.
- வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மனித உடலில் பெரிதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுகிறது. இதனால் முடிந்தளவு வாகனங்கள் இருக்கும் இடங்களில் பயணிப்பது, நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற வேலைகளை குறைக்க வேண்டும். அவசரமில்லாத, சாதாரண சூழல்களில், பொது வாகனங்களில் பயணிக்கலாம்.
- வெளியில் செல்லும் போது, மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். குறைந்தபட்சம் கைகுட்டையையாவது கொண்டு செல்லலாம். வீதிகளில் உங்கள் ஏதாவது புகை மற்றும் கழிவுகளால் துர்நாற்றம் எழும் பொழுது உங்களுக்கு மூக்கை மறைப்பதற்கு தேவைப்படும். சிலர் மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் பொழுது தலைகவசம் அணியமாட்டார்கள். வாகனங்களில் பயணிக்கும் பொழுது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
- குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே குப்பைகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும். இதுவே டெல்லியின் காற்று மாசுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. முடிந்தவரை கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும்.
- அதிகம் நெரிசலான இடங்களில் வாழ்பவர்கள், அன்றாடம் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். உதாரணமாக, காலை மற்றும் இரவு வேளைகளில் அமைதியான சூழலில் அமர்ந்து மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விட வேண்டும். இப்படி பயிற்சி செய்தால் சுவாசக்கோளாறு சீராக நடக்கும்.
- காற்று மாசுபாட்டால் பலருக்கும் சுவாச பிரச்சினைகள் உள்ளன. அதற்கு முடிந்தளவு சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்ற பிரச்சனைகளை தீவிரத்தன்மை அடையாமல் பார்த்து கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |