இரண்டு மகள்களிடமும் சிக்கிக் கொள்ளும் கோபி... ராதிகா வீட்டில் நடக்கும் மற்றொரு விஷேசம்!
பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோவில் ஆசை ஆசையாக சுற்றுலா செல்லும் இனியா, மயூரியால் தடைப்படும் பயணம், இருவருக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கோபி.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர். இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள்.
கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களையும் அவர் கணவரை எதிர்த்து வெற்றி பெற்று கெத்து காட்டும் கதையாக காட்டி வருகிறார்கள்.
இன்றைய ப்ரோமோவில்,
இன்றைய பாக்கியலட்சுமி ப்ரோமோவில் இனியா தனது தந்தையான கோபியுடன் கேரளா சுற்றுலா செல்ல ஆசை ஆசையாக தயாராக இருக்கிறாள்.
மற்றொரு பக்கம் ராதிகா வீட்டில் ராதிகாவின் மகள் மயூரி வயதுக்கு வந்து விட நாளைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொல்லி கோபியை எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லி வீட்டிலேயே இருக்க சொல்லி கட்டையிடுகிறார் ராதிகா.
இவர்கள் இருவரிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தத்தளிக்கும் கோபியின் நிலைமை ப்ரோமோ காட்சியாக வெளியாகியிருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |