பாக்கியலட்சுமி சீரியல் ஏற்பட போகும் அதிரடி டிவிஸ்டை போட்டுடைத்த நந்திதா ஜெனிஃபர்! சிரியலில் இருந்து திடீரென்று விலக என்ன காரணம்?
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறும்போது, சீரியலின் டிவிஸ்டையும் போட்டுடைத்துள்ளார்.
பெங்காலி மொழியில் ஒளிபரப்பான ’ஸ்ரீமோயி’ தொடரின் மறு ஆக்கமாக தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டாப் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் பாக்கியலட்சுமி தொடர் இடம்பிடித்து. நாடகத்தின் லீட் ரோலான பாக்கியலட்சுமி கதாப்பாத்திரத்தில் சுசித்திரா நடிக்கிறார்.
கோபிநாத் கதாப்பாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். நந்திதா ஜெனிஃபர் பாக்கியலட்சுமியின் தோழியான ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கதையின்படி, பாக்கியலட்சுமிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவளாக பாக்கியலட்சுமி இருக்கும்போது, அவருடைய கணவர் கோபிநாத்துக்கு முன்னாள் காதலியான ராதிகாவுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் கோபிநாத்துக்கு ராதிகாவும், பாக்கியலட்சுமியும் தோழிகள் என தெரியவந்தாலும், பாக்கியலட்சுமியின் கணவர் என்பதை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்.
ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இவர்களின் தொடர்பு மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலையில், ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஜெனிஃபர், பாக்கியலட்சுமி தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
அவரின் திடீர் விலகல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நந்திதாவுக்கு பதிலாக ரேஷ்மா அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் ஏன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினேன்? என்பது குறித்து நந்திதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப்போகும் டிவிஸ்டுகளையும் தெரிவித்துள்ளார்.
நந்திதா வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடைய சொந்த காரணங்களுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நல்ல விஷயத்தை மற்றொரு வீடியோவில் சொல்வதாக கூறியுள்ள அவர், பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரை பாக்கியலட்சுமிக்கு தோழியாக இருந்த ராதிகா எதிரியாக மாறப்போவதாக கூறியுள்ளார்.
நேர்மறையான கதாப்பாத்திரமாக இருந்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கும் நிலையில் திடீரென வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை எனக் தெரிவித்துள்ளார்.
நெகடிவ் ரோல் தன்னுடைய கேரியரை கெடுத்துவிடும் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை எனவும் நந்திதா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இந்த தகவல் மூலம் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற டிவிஸ்டும் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
நந்திதா இப்போது சீரியலின் டிவிஸ்டை வெளியே சொல்லிவிட்டதால், கதை அவர் கூறியபடியே செல்லுமா? அல்லது வேறொரு டிவிஸ்டுக்கு இயக்குநர் திட்டமிட்டுளாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
நந்திதாவின் வீடியோவுக்கு கமெண்ட் அடித்த நெட்டிசன்கள் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினீர்கள் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், பாக்கியலட்சுமி சீரியலின் டிவிஸ்டை கூறியதற்கும் நன்றி கூறியுள்ளனர்.