முடிவிற்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்: ஒரே ஒரு புகைப்படத்தால் குழம்பிப் போன ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியல் முடிவிற்கு வரப்போகிறது என்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரையும் கவலையடைய வைத்திருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த சீரியல் மக்களுக்கு அதிகம் பிடித்துப்போகவே அடுத்து என்ன அடுத்து என்ன என அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் சென்றுக் கொண்டிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒரு சீரியலாக மாறிவிட்டது.
இந்த சீரியல் கோபி, ராதிகா, பாக்யா இவர்களை வைத்து தான் விறுவிறுப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் கோபியின் நடிப்பிற்கு பல ரசிகர்கள் இருக்கிறார். இரண்டு கல்யாணம் செய்துக் கொண்டு கோபி படும் திண்டாட்டம் அனைவரையும் ரசிக்கும் படி செய்திருக்கிறது.
முடிவிற்கு வருகிறதா?
இந்நிலையில் தற்போது வெளியான புகைப்படத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து விட்டனர். குறித்த புகைப்படத்தில் பாக்யாவும் கோபியும் ஒன்று சேர நின்று கீழே சுபம் என முடித்திருப்பது போல புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் என்னாது சீரியலை முடிக்கப் போகிறீர்களா என சீரியஸ் ரியாக்சன் கொடுத்து வருகிறார்கள். மேலும், இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை தொடர்ந்து என்ன நடக்கப் போகிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.