பாக்கியலட்சுமி சீரியல் நாயகி பாக்கியா மீது புதிய குற்றச்சாட்டை வைக்கும் அமிர்தா! என்ன சொன்னார் தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடிக்கும் ரித்திகா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சின்னத்திரைக்கு அறிமுகம்
இவர் முதல் முதலில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கும் அறிமுகமானார். ஆனால் இவருக்கு இந்த சீரியல் ஒரு நிலையான வரவேற்பை கொடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலில் நடித்து கொண்டே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ரீச் கிடைத்தது.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இளைய மருமகளாக மாறி முக்கியமான கதாபாத்திரமாக மாறியுள்ளார் பல சண்டைகளுக்கு மத்தியில் பாக்கியா அமிர்தாவை எழிலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
பாக்கியா மீதான குற்றச்சாட்டு
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா, பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியா மீது ஒரு குற்றச்சாட்டுடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், பாக்கியா அவரின் கேட்ரிங்கில் வேலை பார்ப்பதற்காக தான் எழிலுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார் என்றும், இதில் வேலைச் செய்ய சாப்பாடு மட்டும் தான் சம்பளம் கிடையாது” என கூறியுள்ளார்.
அதற்கு பாக்கியா,“ நீ அழுகவும் தான் திருமணம் செய்து வைத்தேன். வேலையில்லாதவர்கள் பாக்கியாவுடன் இணைந்து சமைக்கலாம் ” எனவும் அதில் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், பாக்கியலட்சுமி சீரியில் இனிவரும் எபிசோட்கள் எல்லாம் மிகவும் விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்க்கிறார்கள்.