ஈஸ்வரியின் பிளானை புட்டுபுட்டு வைக்கும் செல்வி.. அதிர்ச்சியில் பாக்கியா- சேர்வார்களா?
பாக்கியா- கோபியை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈஸ்வரி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பார்க்க போன ராதிகாவிடம் கோபி மற்றும் அவரின் குடும்பத்தினர் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள்.
அதே சமயம், செழியன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனி கேள்வி கேட்கிறார். ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக பாக்கியா மருத்துவமனைக்கு வரவில்லை.
இது குறித்து ஈஸ்வரி கேட்ட போது பாக்கியா, “ அவரின் உயிருக்கு ஆபத்து என்றதும் நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். அத்துடன் என்னுடைய கடமை முடிந்துவிட்டது, இனி அவரை நான் வந்து பார்க்க மாட்டேன்..” என முகத்திற்கு முகம் கூறி விடுகிறார்.
பின்னர் மருத்துவமனைக்கு அனைவரும் கோபியை அழைக்க சென்ற போது ராதிகாவுடன் செல்ல மாட்டேன், அம்மாவுடன் வீடுக்கு செல்வேன்.. என அடம்பிடித்து பாக்கியாவுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.
இதனை தொடர்ந்து, ஈஸ்வரி கோபியும் அமர்ந்து பாக்கியாவின் பெறுமைகளை பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா காலையில் எழுந்தது முதல் செய்யும் வேலைகள் குறித்து வீட்டிலுள்ளவர்கள் பெறுமையாக பேசுகிறார்கள்.
மீண்டும் பாக்கியாவுடன் சேரும் கோபி
இந்த நிலையில், குணமடைந்து வரும் கோபிக்கு மீண்டும் பாக்கியா மீது காதல் வந்துள்ளது. பாக்கியாவின் வெற்றிக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டுகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா சமையலறையில் இருக்கும் பொழுது கோபி ஈஸ்வரியிடம் மருந்து குடிப்பதற்காக தண்ணீர் கேட்கிறார். ஈஸ்வரி விழித்திருந்தும் வராமல் தூங்குவது போன்று நடிக்கிறார்.
பின்னர் பாக்கியா தண்ணீர் போத்தலை எடுத்து கொண்டு கோபியின் அறைக்குள் செல்கிறார். அப்போது கோபி, பாக்கியாவை வழிமறித்து செய்த உதவிக்கு நன்றி என கூறுகிறார். இதனை வெளியில் இருந்து ஈஸ்வரி கேட்டு மகிழ்ச்சியடைகிறார்.
ஈஸ்வரியின் இந்த வேலைகளை பொறுமையாக செல்வி பார்த்து கொண்டிருந்து, பாக்கியாவிடம் கூறி விடுகிறார். மாமியாரின் இந்த செயல் பாக்கியாவிற்கு கோபத்தையும், ராதிகாவிற்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதனை ஈஸ்வரி புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |