புது வீடு, சொகுசு கப்பல் என கோடிகளில் புரளும் ஆல்யா- கேரளாவில் ஆரம்பித்த Business
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கிய உள்ளதாகவும் அதன் பெறுமதியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சஞ்சீவ்- ஆல்யா மானசா தம்பதியினர்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதற்கிடையில், அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவை காதலித்து திருமணம் கடந்த 2019-ம் ஆண்டு செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
அதே தொலைக்காட்சியில் கார்த்திக் சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகராக நடித்து வருகிறார். இவ் இரண்டு சீரியல்களும் குறித்த தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கின்றன.
இந்த நிலையில், சின்னத்திரை நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஆல்யா ஒரு நாளைக்கு சீரியல் நடிப்பதற்கு மாத்திரம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
சின்னத்திரை மூலம் வளர்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் பெரிய வீட்டை கட்டி அதில் குடியேறினர்.
புது பிஸ்னஷ் என்ன தெரியுமா?
இதனை தொடர்ந்து ஆல்யா - சஞ்சீவ் இருவரும் புது பிசினஸ் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்களாம்.
இதன்படி, கேரளா மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் மிக பிரபலமாக உள்ளது. அங்குள்ள போட் ஹவுஸில் விடுமுறையை கழிக்க இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த பலரும் ஆலப்புழா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
போட் ஹவுஸில் தங்க ஒரு நாளைக்கே ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது. இதனை கவனித்த ஆல்யா மானசா தற்போது சொந்தமாக போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அந்த போட் ஹவுஸின் விலை ரூ.2 கோடியாம்.
அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரம்மாண்ட டைனிங் ஹால், டிஜே என சகல வசதிகளும் இருக்கிறது. புது பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள ஆல்யா மானசாவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |