கீர்த்தி சுரேஷை விஷால் காதலித்தாரா? நடிகை சொன்ன பதில்- பயில்வான் ஓபன் டாக்
நடிகர் விஷால் கீர்த்தி சுரேஷை காதலித்து வந்ததாக பயில்வான் ரங்கநாதன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
இன்னும் 2 நாட்களில் திருமணம்
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகிய வேளையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி இருவரும் திருமணம் நடைபெறவுள்ளது. கடந்த 15 வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.
இவர்கள் திருமணம் கோவாவில் நடைபெறவுள்ளதாகவும் கீர்த்தி சுரேஷ் அவர் வாயால் உறுதிச் செய்துள்ளார்.
பெண் கேட்டு சென்ற விஷால்
இப்படியொரு சமயத்தில் திரையுலகமே அசந்து போகும் படி பயில்வான் ரங்கநாதன் ஒரு செய்தி பகிர்ந்துள்ளார்.
அதாவது, “சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷாலும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக நடித்திருப்பார்கள். அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷை நடிகர் விஷாலுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் அந்த பட இயக்குநர் லிங்குசாமி மூலம் அவரை பெண் கேட்டு விஷால் வீட்டில் சென்றுள்ளார்.
அப்போது கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டார்கள். அப்போது கீர்த்தி இன்னொருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.” என கூறினார்.
இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே திருமணத்திற்கு இருப்பதால் நடிகை கீர்த்தி சுரேஷ் நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |