மீண்டும் பாக்யாவை வெறுக்கும் இனியா: தாய் தந்தையாக மேடையேறிய கோபி- ராதிகா
பாராட்டு விழாவிற்கு வராத காரணத்தினால் பாக்யாவிடம் கோபித்துக் கொள்கிறார் இனியா. அதே விழாவில் இனியாவுடன் ஜோடியாக ராதிகா கோபி நிற்கிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களையும் அவர் கணவரை எதிர்த்து வெற்றி பெற்று கெத்து காட்டும் கதையாக காட்டி வருகிறார்கள்.
மீண்டும் வெறுப்பை கொட்டும் இனியா
பரீட்சையில் நல்ல மார்க் எடுத்து பள்ளியில் முதல் மாணவியாக வந்த இனியாவை பாராட்டும் முகமாக காலணியில் இருப்பவர்கள் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த விழாவில் இனியாவின் அம்மா பாக்யா இல்லாமல் ராதிகாவும் கோபி ஜோடியாக வாழ்த்து சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
எல்லாம் முடிந்தவுடன் பாக்யா மேடைக்கு போய் இனியாவிடம் மன்னிப்பு கேட்க பாக்யாவை தட்டி விட்டு "என்னை விட உனக்கு பிசினஸ் தானே முக்கியம், நீ எங்கிட்டப் பேசாத" என கோபமாக சொல்லிவிட்டார். இந்தக் காட்சிகள் இன்றைய ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |