பாக்கியாவுக்கு கைக்கொடுக்கும் நடிகர் ரஞ்சித்: கோபி பரிதாபநிலை என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு போட்டியாக பழனிசாமி என்கிற ரஞ்சித் களமிறங்கி இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் விட்ட சவாலை நிறைவேற்றத் துடிக்கும் பெண்ணாக காண்பித்து வருகிறார்கள்.
கோபியிடம் விட்ட சவாலை வெல்லவதற்காக திருமண ஆர்டர்களை எடுத்து சமைத்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு வீட்டையும் சவாலையும் சமாளித்து வருகிறார்.
இவரின் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் ராதிகா. பாக்கியாவின் தோழியாக இருந்த ராதிகா கோபியால் பாக்யாவிற்கு எதிரியாக மாறிவிட்டார்.
சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரஞ்சித்
பாக்யாவின் கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சீரியலில் புது என்ட்ரியாக நடிகர் ரஞ்சித் வந்திருக்கிறார்.
நடிகர் ரஞ்சித் பழனிச்சாமி என்கிற கதாபாத்திரத்தில் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்றைய எபிசோடில் வண்டியில் வரும் பாக்யா மீது அவர் மோதி விடுகிறார்.
இதனால் கட்டுப்பாடின்றி கீழே விழுந்து விடுகிறார் பாக்யா. கீழே விழுந்த பாக்யாவை பழனிச்சாமி கைக்கொடுத்து உதவுகிறார். இவ்வாறு இவர்கள் சந்திக்கும் காட்சி ப்ரோமா காட்சியாக வெளியாகி இருக்கின்றது.
பழனிச்சாமியின் வருகை ரசிகர்களுக்கு பல கேள்விகளை எழுப்பி வருகிறது. ஒருவேளை பாக்கியாவிற்கு ஜோடியாக மாறிவிடுவாரா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.