பாக்யாவிடம் நெருக்கமாக இருக்கும் கோபி: இதெல்லாம் ராதிகா பார்த்தா என்னாகும்
பாக்யாவை கோபி கட்டிப்பிடித்தப்படி இருக்கும் புகைப்படம் ஒன்றை சுசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சீரியலில் தற்போது கோபி கொஞ்சம் கொஞ்சமாக பாக்யா பக்கம் சாய்வது போல காட்டப்படுகிறது. இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாத ராதிகா வீட்டை விட்டு கிளம்பிய காட்சி இறுதியாக வெளியாகியிருந்தது.
பாக்கியாவுடன் நெருக்கமாக இருக்கும் கோபி
தற்போது சீரியலில் அனைவரையும் தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.
இந்நிலையில் பாக்யா தனது தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.