நான் பாக்கியலட்சுமி சீரியலில் இனி இல்லை.. புது குண்டை தூக்கி போட்ட கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கோபி சீரியலை விட்டு ஓய்வெடுக்கப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைகாட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் உள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா - கோபி இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து புதிய திருப்பமாக பாக்கியா - கோபி - ராதிகா என மூன்று கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டது. தற்போது பாக்கியாவிற்கு துணையாக பழனிசாமி என்ற கதாபாத்திரம் வைக்கபட்டுள்ளது.
40 வயதை தாண்டிய இரு ஜோடிகள் தனது வாழ்க்கைக்கு தேவையான ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் கொண்டு செல்லப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா எனும் சுஜித்ராவிற்கு சீரியலில் நிறைய சீன்கள் வைக்கபடுகிறது. இவர் தான் தற்போது இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலை விட்டு ஓய்வு பெறும் ஹீரோ
இந்த நிலையில் பாக்கியாவிற்கு பழனிச்சாமி என்ற ஒரு புது ஜோடி கொண்டு வரப்பட்டுள்ளதால் கோபிக்கான சீன்கள் குறையும் என கோபி எனும் சதீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவருக்கு கொடுத்த அதே சப்போர்ட்டை அவருக்கும் கொடுத்து பாக்கியலட்சுமி சீரியலை இன்னும் ரீச் அடைய செய்யுமாறு கோபி அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் 3 ஆண்டுகள் பணியாற்றி விட்டதால், அவருக்கு ஓய்வு வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில், இதனை பார்த்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள், “ கோபி இல்லாவிட்டால் பாக்கியலட்சுமியின் சுவாரஸ்யம் குறையும்” என கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் - Sathish pic.twitter.com/haVJu62fYJ
— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023