பாக்கியலட்சுமி கோபி யார் தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கணவராக நடித்து வரும் கோபியைப் பற்றிய பல தகவல்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியொன்றில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. குறித்த சீரியலில் தற்போது கோபியிடம் விட்ட சவாலுக்காக பாடுபடும் காட்சிகளும் ராதிகா கோபியின் இருவீட்டுத் திண்டாட்டம் தான் காட்சிகளாக வெளியாகி வருகின்றது.
பாக்கியாவின் ரீல் கணவர்
இந்நிலையில் கோபி பற்றி நாம் அறிந்திராத சில தகவல்கள் உள்ளது. கோபியாக உருவம் பெற்றவரின் உண்மையான பெயர் சதீஷ். இவர் 1979ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பெல்லாமே சென்னையில் தானாம்.
படிப்பிற்குப் பிறகு 1999ஆம் ஆண்டு தான் சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார்.
இவரின் முதல் திரைப்படம் மின்சாரப்பபூவே, மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணப்பரிசு (2), மகாராணி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.
இந்த எல்லா சீரியல்களிலும் நடித்து கிடைக்காத திருப்புமுனை தான் பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்தது. இவரின் உண்மையான பெயர் சதீஷ் என்றாலும் தற்போதும் அனைவரிடமும் கோபியாகத்தான் அறியப்படுகிறார்.
சீரியல்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் தோன்றியிருக்கிறார். இவற்றில் தனி ஒருவன், இருமுகன், ராமானுஜம், போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் தற்போது எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக கோபி தான் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர் போல உடையணிந்து வந்ததும் அசல் எம்.ஜி.ஆராகவே இவர் தோற்றமளிக்கிறார்.
மேலும், பாக்கியலட்சுமியில் தன்முக பாவனைகளால் மக்களைக் கவர்ந்தவர் இன்னும் நிறைய நிறைய திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.