கோபிக்காக பாக்யா போட்ட காப்பி: மீண்டும் சண்டைக்கு நிற்கும் ராதிகா! அடுத்து நிகழப்போவது என்ன?
மாமனாரி பேச்சை மதித்து கோபிக்கு காபி போட்டு கொடுத்த பாக்யா, ராதிகாவின் என்ரியால் பின்னங்கால் பிடரி அடித்துக் கொண்டு ஓடிய காட்சி ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
பாக்கிலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தான் இப்போது டாப்பில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு பெருமளவான மக்கள் ஆதரவைக் கொடுத்து உச்சத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் பாக்கியா, கோபி,ராதிகா என மூன்று கதாப்பாத்திரத்தை வைத்து அனைவரையும் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் தொடருமா ராதிகா - பாக்யா சண்டை
இந்நிலையில் இன்றைய ப்ரோமோ காட்சியில் தலைவலி எனச் சொல்லி தந்தையிடம் கதைத்துக் கொண்டிருக்கிறார் கோபி, மனம் கேட்காமல் பாக்யாவிடம் கோபிக்கு ஒரு காபி போட்டு கொடம்மா என சொல்லி விட்டு எழும்பி செல்கிறார்.
கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்த பாக்யா சரி என நினைத்து விட்டு காபி போட்டு கொடுக்கிறார். அவர் கோபி கையில் காபியை கொடுக்க போகும் போதும் ராதிகா வருகிறார்.
ராதிகாவைப் பார்த்து பதறி அடித்துக் கொண்டு ஓடுகிறார் கோபி. இதனால் ராதிகா பாக்யா மீண்டும் கோபியுடன் இணையத்தான் நாடகம் போடுகிறார் என ஒரு முறை பாக்யாவை முறைத்துப்பார்க்கிறார்.