ஆளே இல்லாத ஹோட்டலுக்கு சமைக்க போகும் கோபி! பாக்கியாவுடன் மீண்டும் சேர்வாரா? குழப்பத்தில் ரசிகர்கள்..
பாக்கியலட்சுமி சீரியல் கோபி சமையல்காரர் ஆடையில் நின்று கைகளை நீட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியில் பாக்கியா - கோபி - ராதிகா - செழியன் - பாட்டி - தாத்தா -இனியா என பல கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பாக்கியாவுடன் வாழ முடியாமல் திருட்டுத்தனமாக விவாகரத்து வாங்கிக் கொண்டு முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்தவர் தான் கோபி.
இருவருக்கும் இது மறுமணம் என்பதால் ராதிகாவிற்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அந்த குழந்தையுடன் தான் ராதிகாவை கோபி திருமணம் செய்தார்.
கேட்ரிங்கில் சமைக்கும் கோபி
இப்படியொரு நிலையில் ராதிகாவின் தொல்லை தாங்காமல் மீண்டும் பாக்கியாவை தேடிச் சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து ராதிகாவுடன் கோபி இருக்கும் இடத்தில் தான் இருப்பேன் என பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் பாக்கியா இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி பாக்கியலட்சுமி புதிய கேட்டப் போட்டால் அதனை புகைப்படமாக இன்ஸ்டாவில் பதிவிடுவார்.
அந்த வகையில் கேட்ரிங்கில் சமைப்பது போல் ஆடை அணிந்து புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,“ ஆளே இல்லாத ஹோட்டலுக்கு எங்க கோபி சமைக்க போறீங்க.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.