எப்படி இருந்த நம்ம பாக்யா! கோபியால இப்படி மாறிட்டாங்களே? மாஸ் மங்கையாக மாறிய தருணம்
பிரபல தொலைக்காட்சியொன்றில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த சீரியல் மக்களுக்கு அதிகம் பிடித்துப்போகவே அடுத்து என்ன அடுத்து என்ன என அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் சென்றுக் கொண்டிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒரு சீரியலாக மாறிவிட்டது.
இந்த சீரியலில் பல கதாப்பாததிரத்தில் நடித்து வந்தாலும், இதற்கு உயிரூட்டுபவர்கள் பாக்யா, கோபி, ராதிகா தான். இவர்களை வைத்து தான் கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
மாஸ் மங்கையாக மாறிய பாக்யா
இந்த சீரியலில் தற்போது கோபி, பாக்யாவை விட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டதால் ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் எதிரியாக மாறியிவிட்டார் பாக்யா.
இதனால் எதுவும் தெரியாமல் இருந்த பாக்கியாவைப் பார்த்து எல்லோரும் கலாய்த்து வந்தநிலையில், தற்போது நடை, உடை, பாவனை என எல்லாம் மாற்றி மாஸ் காட்டி வருகிறார்.
இவரின் இந்த மாற்றத்தை எமது பிரபல தொலைக்காட்சி பாக்யாவிற்காகவே புதிய ப்ரோமோவை வெளியிட்டு பெருமையடைய வைத்திருக்கிறது.