என்னா மேடம் பேச்சு வரலையா? தெனாவட்டுடன் சுற்றும் ராதிகாவிற்கு நச் என பதிலடி கொடுத்த பாக்கியா
சல்வார் போட்டால் தான் இங்கு கேண்டீன் செய்ய முடியும் என கூறி ராதிகாவை, பாக்கியா வாயடைத்து நிற்கும் படி செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிக்கு என்ன காரணம்?
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் திருமணத்திற்கு பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிக்கும் கணவரின் கதையை அப்படியே படமாக்கி காட்டி வருகிறார்கள்.
மேலும் கதாநாயகரை விட கதாநாயகியின் பங்கு அதிகம் இருப்பதால் இல்லத்தரசிகளின் ஆதரவு அதிகமாக இந்த சீரியலுக்கு கிடைக்கிறது.
ராதிகாவிற்கு குடும்பத்தில் ஒரு அங்கிகாரம் கிடைக்காமல் எல்லா இடங்களிலும் கோபியின் பிள்ளைகள் மத்தியில் அசிங்கப்படுகிறார்.
நச் என பதிலடி கொடுத்த பாக்கியா
இந்த நிலையில், ராதிகாவின் அலுவலகத்தில் கேண்டீன் எடுத்து செய்வதால் உயர் பதவியில் இருக்கும் ராதிகா அடிக்கடி பாக்கியாவை சண்டை இழுத்து கொண்டிருக்கிறார்.
வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் தோற்று போன பாக்கியா வியாபாரத்தில் ஜெயித்து வருகிறார். பெண்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் என்ற கூற்றிற்கு உதாரணம் கூறும் வகையில் இந்த கதை நகர்கிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சல்வார் போட்டுக் கொண்டு ராதிகாவிற்கு ரிவன்ஜ் கொடுத்த பாக்கியாவின் செயல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
