வாய்க்கு வந்தப்படி எழுதிய விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த நித்யா! கைது வரை செல்ல இதுதான் காரணமாம்
தாடி பாலாஜியின் மனைவி பக்கத்து வீட்டிலுள்ள காரை கல்லால் அடித்து உடைத்தார் என்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நித்யா பதிலடி கொடுத்துள்ளார்.
திரைக்கு வந்த குடும்ப பிரச்சினை
தமிழ் சினிமாவில் பல கொமடி நடிகராக இருந்தாலும் 90களில் வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் கலக்கியவர் தான் நடிகர் தாடி பாலாஜி.
இவரின் யதார்த்தமான நடிப்பால் இவருக்கென பல ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவரின் காதல் மனைவி எப்போதும் சண்டையிடுவது என்பது உலகறிந்த விடயமாக மாறிவிட்டது.
இந்த நிலையிலும் இவர்களுக்கு போஷிகா என்ற அழகான பெண்குழந்தையும் இருக்கிறது.மேலும் இந்த விடயம் தாடி பாலாஜியும் அவரின் மனைவி நித்தியாவும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என பிரபல தொலைக்காட்சியால் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தான் வெளியானது.
இதனை தொடர்ந்து இவர்களின் சண்டைகள் எல்லைமீறிய நிலையில் கோர்ட், போலிஸ் என மிகவும் வைரலான நிலையில் இருவரும் சமிபக்காலமாக பிரிந்து தான் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
அடுத்த வீட்டுக்காரரின் சிலுமிசங்கள்
இந்த நிலையில் போஷிகாவுடன் தனியாக வாழ்ந்து வரும் நித்யா, பக்கத்து வீட்டிலுள்ள வயதான ஆசியர் ஒருவரின் காரை “நள்ளிரவில் கல்லால் அடித்து உடைத்ததாக” வழக்கு பதிவு செய்யப்பட்டு , விசாரனைக்காக இவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில் என்ன நடந்தது என சரியாக தெரியாமல் விமர்சகர்கள் கண்ட மாதிரி செய்திகளை பரப்பி வந்த நிலையில், இதற்கு நித்தியா பதிலளிக் கொடுத்துள்ளார்.
அதில், “ அவருக்கும் எனக்கும் ஏற்கெனவே சரி வராது. இதனால் அவர்களுடன் நான் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் என்னுடைய கணவருக்கும் பிரச்சனை நடக்கும் போது முழுக்க முழுக்க இவர்தான் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து அவரை என்னிடம் இருந்து பிரித்தார்கள்.
உண்மையயை உடைத்த நித்யா
மேலும் என்னுடைய வீட்டில் நடக்கும் விடயங்களை தவறாக பாலாஜிக்கு சொல்வதே இவர் தான். பாலாஜி என்னை அடித்த போது நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். இதன்போது எனக்கு பலத்த கோபம் வந்ததால் இவரை அவதூறாக பேசியது உண்மை.
இப்போது இவரின் காரை உடைத்ததாக ஒரு பொய்யான தகவலை பரப்பியுள்ளார். ஆனால் இது உண்மையல்ல அந்த வீடியோ காட்சியில் இருப்பது நான் தான். நான் “துணிவு” திரைப்படம் பார்ப்பதற்கு செல்லும் போது பதிவான காட்சி தான் அது.
ஆனால் இதுக்கான ரிவன்ஜ் எடுத்தே தீருவேன். நானும் வழக்கு பதிவு செய்யப்போகிறேன் என பல கருத்துக்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த செய்தியை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள். மேலும் குடும்ப பிரச்சினையால் ஏற்படும் விளைவுகள் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.