கார் பார்க்கிங்கை ஜிம்மாக மாற்றிய கோபி.. வீடியோவை பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள்!
கார் பார்க்கிங்கில் உடற்பயிற்சி செய்யும் பாக்கியலட்சுமி கோபியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீரியல் பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் சதிஸ்.
இவர் சீரியல் மட்டுமல்ல சினிமா, சீரிஸ் என எதில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தத்துருவமாக நடிக்கக் கூடியவர்.
நடிகர் சதிஸ் கடந்த 1979 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 44 வயதாகின்றது.
ஆனாலும் இவ்வளவு வயதிலும் அவ்வளவு இளமையாக இருக்கிறார்.
மேலும் நடிகர் மட்டுமல்ல மாடலிங் துறையிலும் சிறந்தவராக இருந்து வந்துள்ளார்.
கார் பார்க்கிங்கை ஜீம்மாக மாற்றிய கோபி
இந்த நிலையில் நடிகர் சதிஸ் சமிபக்காலமாக அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கார் பார்க்கிங்கிலுள்ள சுவரில் ஏறி உடற்பயிற்சி செய்யும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சி கோபியின் உடல் ஆரோக்கியம் பற்றி தெளிவாக ரசிகர்களுக்கு காட்டுகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ கோபியின் அழகிற்கு இது தான் காரணமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.