தாத்தாவாகிய கோபி! அசிங்கப்பட்டு பரிதாப நிலையில் நின்ற சோகம்
பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் குழந்தையை தூக்கிக்கொண்டு இனியா கோபியின் வீட்டிற்கு வந்து கொடுத்துள்ள அதிர்ச்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
சமீபத்தில் எழில், அமிர்தா திருமணத்தினை பாக்கியா, தனது குடும்ப நபர்கள் அனைவரையும் எதிர்த்து வெற்றிகரமாக நடத்தி வைத்துள்ளார்.
தாத்தாவான கோபி
இந்நிலையில் கோபி மீண்டும் வீட்டை விட்டு காலி செய்யுமாறு பாக்கியாவை வற்புறுத்திய நிலையில், இறுதியில் அவரது தந்தையின் சொத்தை கொடுத்துள்ளதால் சமாதானமாக இருக்கின்றார்.
ஆனாலும் பாக்கியாவிடம் 20 லட்சம் ரூபாய் இன்னும் தர வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், இதற்கு பாக்கிய 6 மாதம் அவகாசம் கேட்டுள்ளார்.
தற்போது எழில் குழந்தையை வெளியே தூக்கி வந்த நிலையில், இனியா குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியதுடன், கோபியின் வீட்டிற்கே கொண்டு செல்கின்றார்.
அங்கு கோபியை தாத்தா என்று இனியா கூற கோபியோ... I am not தாத்தா என்று பரிதாப ரியாக்ஷன் கொடுக்க, இதற்கு இனியாவின் தாத்தா கோபியை தாறுமாறாக கலாய்த்து அசிங்கப்படுத்தியுள்ளார்.