வீட்டுக்காக கோபி கொடுக்கும் நெருக்கடி! பரிதாபமாக நின்ற பாக்கியா என்ன செய்யப் போகிறார்?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமணம் ஒருவழியாக நிறைவு பெற்ற நிலையில், கோபி மீண்டும் வீட்டை காலி செய்யுமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
சீரியலில் நடிகை சுசித்ரா பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், இவருக்கே மக்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது.
கோபி கொடுக்கும் நெருக்கடி
சமீபத்தில் எழில், அமிர்தா திருமணத்தினை, பாக்கியா குடும்ப நபர்கள் அனைவரையும் எதிர்த்து திருமணத்தினை வெற்றிகரமாக நடத்தி வைத்துள்ளார்.
இத்தருணத்தில் பாக்கியாவை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேற கோரியிருந்த நிலையில், தற்போது அதே வீட்டில் பாக்கியா இருக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்த காட்சியில் கோபியிடம் சென்று அவரது அம்மா வீட்டை குறித்து பேசும் நிலையில், தந்தை தனது சொத்தை எடுத்துக்கொள் என்றும் வீட்டை மட்டும் விட்டுவிடு என்று கூறியுள்ளார்.
ஆனால் இதனை பொருட்படுத்தாத கோபி ஆவேசமாக வந்து பாக்கியாவிடம் இப்போதே வீட்டை காலி செய்யுமாறு கூறி நெருக்கடி கொடுத்து வருகின்றார்.