தந்தையை அடித்து கட்டிலில் தள்ளிய எழில்: பாக்கியலட்சுமி சீரியலில் லீக்கான காட்சி
பாக்யலட்சுமி சீரியலில் கோபி எழில் இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது
ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய்டிவிக்கு தனி இடம் உண்டு. ரியாலிட்டி ஷோ, சீரியல் என இளைஞர்களையும் இல்லத்தரசிகளையும் கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் விஜய்டிவியில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் சீரியல் பாக்யலட்சுமி.
இல்லத்தரசி ஒருவரின் வாழ்கையில் நடக்கும் பல விஷயங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தொடக்கத்தில் சரியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது ரசிகர்களின் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதில் பாக்யலட்சுமி என்ற முன்னணி கதாப்பாத்திரத்தின் கணவர் கோபி குடும்பத்திற்கு தெரியாமல தனது பள்ளி தோழியுடன் பழகுகிறார்.
இந்த பழக்கம் நாளைடைவில் பாக்யா – கோபி தம்பதியின் இளையமகன் எழிலுக்கு தெரியவர, எழில் தனது தந்தை கோபியை பலமுறை எச்சரிக்கிறான். ஆனாலும் கோபி தனது முடிவில் மாறாமல் இருப்பதால் இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த சீரியல் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்கள் இருவரும் வரும் சீன்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து வருகிறது.
மேலும் இவர்களுக்கு இடையே உள்ள மோதல் எப்போது வெடிக்கும், எழில் எப்போது தனது அப்பா கோபியை தாக்குவார் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது. இதில் எழிலாக நடித்து வரும் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கோபி ஆவேசப்பட்டு எழிலை தள்ளிவிட பதிலுக்கு எழில் கோபியை பிடித்து கட்டிலில் தள்ளுகிறார்.
குத்துச்சண்டை பாணியில் இருவரும் ஜாலியாக அடித்து, சண்டை போடும் இந்த வீடியோ தற்போது பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.