என்னை காரி துப்புவார்கள்.. லீக்கான வீடியோவால் பயனர்களின் கடுமையான விமர்சனம்!வீடியோ வெளியிட்ட கோபி
நாய்களுக்கு சாப்பாடு வைப்பதால் சமூக வலைத்தள பயனர்கள் என்னை காரி துப்புவார்கள் என கூறிய வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாவது திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்ப பிரச்சினைகளை அப்படியே அழகாக காட்டி வருகிறார். இதில் கதாநாயகராக கலக்கி வருபவர் தான் கோபி.
இவருக்கு இந்த சீரியலில் இரண்டாவது திருமணம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது திருமணம் செய்தால் எப்படியான பிரச்சினைகள் வரும் என்பதனையும் அதன் பின்னர் கதாநாயகி பிரச்சினையை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதனையும் அழகாக காட்டி வருகிறார்கள்.
இதன்படி, கோபி தற்போது குடித்து விட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பதால் அவருடைய அம்மா ராதிகாவை விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்மாறு கூறி விட்டு சென்றுள்ளார்.
என்னை காரி துப்பினார்கள்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி என்கிற சதிஸ் விலங்குகள் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில்,“ வீட்டில் நாம் பாசமாக வளர்க்கும் நாய்கள் நோய்வாய் பட்ட பின்னர் அவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் விடுவது சரியான தவறு.
ஒரு நாயை வளர்த்தால் அதற்கு அம்மா, அப்பா நாம் தான் அதனால் நாய்களுக்கு ஏதாவது நோய் வந்தால் அதற்கு உரிய மருத்துவம் வழங்குமாறு” அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
மேலும் இது போன்ற நாய்களுக்கு உணவளித்து அதனை வீடியோவாக பதிவேற்றும் போது என்னை பார்த்து காரி துப்புவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள், “ காரி துப்புனார்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.