கை வலிக்காம டாய்லெட் மஞ்சள் கறை நீக்கணுமா? செலவே இல்லாமல் இத தெளிங்க
ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமான ஓர் இடமாக கழிப்பறை பார்க்கப்படுகிறது. இதனை சுத்தமாக பராமரிக்காவிட்டால் ஏகப்பட்ட தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கடைகளில் விற்கும் கெமிக்கல் கிளீனர் சில சமயங்களில் கடுமையான வாசனையையும், சருமத்திற்கு எரிச்சலையும் ஏற்படுத்தலாம்.
எனவே வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு கழிப்பறையை செலவே இல்லாமல் சுத்தம் செய்யலாம். இதனால் தொற்றுக்களும் இலகுவாக நீக்கப்படுகின்றன.
அந்த வகையில், சமையலறையிலும், குளியலறையிலும் இருக்கும் சில எளிய பொருட்களை கொண்டு கழிப்பறையை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் கறை அகற்றுவது எப்படி?
டாய்லெட் பிரஷை எடுத்து கழிப்பறையின் உட்புறத்தை நன்றாகத் தேய்த்து விட வேண்டும். இது ஓரமாக ஒட்டியிருக்கும் அழுக்கை கொஞ்சம் சுத்தம் செய்து விடும்.
பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து கழிப்பறைக்குள் ஊற்றவும். ஒரு சிறிய பாத்திரத்தில், கொஞ்சம்(மூலிகை பொடி) வீட்டில் அரைத்த மஞ்சள் தூள் அல்லது சந்தனப் பொடியை போடவும். இது தொற்றுக்களையும், துர்நாற்றத்தையும் இல்லாமல் செய்யும். அதனுடன் நீங்கள் பயன்படுத்தும் வாசனை உள்ள ஷாம்பு ஒரு ஸ்பூன் போட வேண்டும்.
இது நுரையுடன் அழுக்கை எளிதாக வெளியேற்றும். அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். இது அழுக்கை நிரந்தரமாக நீக்கும். அதன் பின்னர், ஒரு அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இரண்டு ஸ்பூன் தயிர் சேர்க்கலாம். இது கறைகளை இலகுவாக அகற்றும் லாக்டிக் அமிலத்தை கொண்டுள்ளது.
கழிப்பறையை வழக்கமாக சுத்தம் செய்ய பயன்படுத்தும் லிக்குவடை கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து, லிக்குவட் ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். பாட்டிலை நன்கு குலுக்கி, கழிப்பறைக்குள் ஊற்றவும். அதன் பின்னர் மீண்டும் டாய்லெட் பிரஷால் கழிப்பறையை நன்றாக தேய்க்கவும்.
லிக்குவட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி தேய்த்து விட்டு, தண்ணீரை ஊற்றினால் மஞ்சள் கறை எல்லாம் சென்று கழிப்பறை பார்ப்பதற்கு வெள்ளையாக ஜொலிக்கும். இப்படி செய்தால் இயற்கையான பொருட்கள் நறுமணம் கழிப்பறை முழுவதும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
