பாக்கியாவிற்கு கோபி கொடுத்த ஒரு மாத கெடு! பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்திய ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் கோபியின் பெயரை நீக்கிவிட்டு எழில் பாக்கியாவின் பெயரை மாட்டியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் பழகி வந்த கோபி அவரையே திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.
கோபியின் இந்த செயலால் ரசிகர்கள் அவரைக் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். தற்போது தாய் பாக்கியாவிடம் சண்டைபோட்டுக் கொண்டு கோபியுடன் வசித்து வருகின்றார் இனியா.
பாக்கியா மற்றும் ராதிகா
மற்றொரு புறம் பாக்கியா மற்றும் ராதிகா இருவருக்குமிடையே கடுமையான போர் நடைபெற்று வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு எழில் வீட்டிற்கு வெளியே வைத்திருந்த கோபியின் பெயர் பலகையை நீக்கி, கோபியை கடும் கோபத்தில் ஆழ்த்தினார். தற்போது பாக்கியலட்சுமி பெயர் பலகையை எழில் வெளியே மாட்டி செல்பி எடுத்ததை பார்த்த கோபி கடும் கோபத்தில் ஆழ்ந்தார்.
பாக்கியாவின் வீட்டிற்கு வந்த சரமாரியாக பேசி பெயர் பலகையையும் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.