குருவிக்கு பதிலாக நாயா? எலன் மஸ்கின் அதிரடி விளையாட்டு.. ஷாக்கில் பயனர்கள்!
டுவிட்டர் செயலின் லோகோவுக்கு பதிலாக சீம்ஸ் நாய் லோகோவை மாற்றியது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சமூக வலைத்தளம்
பொதுவாக தற்போது இருக்கும் பிரபலங்கள், மற்றும் பயனர்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இன்ஸ்டாகிராம், முகப்புத்தகம், வாட்சப், என எத்தனை சமூக வலைத்தள செயலிகள் இருந்தாலும் மக்கள் அனைவரும் டுவிட்டரில் தான் அதிக நாட்டம் காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் பல இன்னல்களுக்கு மத்தியில் டுவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் என்பவர் வாங்கியுள்ளார்.
நீலக்குருவிக்கு பதிலாக சீம்ஸ் நாய்
இவர் இந்த நிறுவனத்தை வாங்கிய பின்னர் பல வகையான மாற்றங்களையும் டுவிட்டர் அப்டேட்களையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது டுவிட்டர் செயலின் அடையாளத்தையே மாற்றியுள்ளார். அதாவது குருவி லோகோவுக்கு பதிலாக சீம்ஸ் நாய் லோகோவை வைத்துள்ளார்.
இந்த மாற்றம் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சில நாட்கள் முன்னர் ட்விட்டரின் புதிய சி.இ.ஓ இவர் தான் என ஜப்பானிய நாயான ஷிபா இனுவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனை பார்த்த பயனர், எலன் மஸ்க்கின் திட்டங்கள் எல்லாம் வியப்பாக இருக்கிறது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.