இலங்கை தமிழர்களின் பிரியமான மல்லுங்கு: எப்படி செய்யலாம்? ரெசிபி இதோ
மல்லுங்கு ("Mallung") என்ற சொல் இலங்கைத் தமிழிலும், சிங்கள மொழியிலும் “கலந்தது”. இந்த ரெசிபி கேட்பதற்கு புதிதாக இருந்தாலும் ஆரோக்கியத்திலும் சுவையிலும் சிறப்பாக இருக்கும்.
இது இலங்கையின் பாரம்பரிய உணவாக பார்க்கப்படுகின்றது. இந்த உணவை செய்ய கீரை மற்றும் வெறு சில பொருட்கள் இருந்தால் போதும். இந்த மல்லுங்கு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நன்றாக சுத்தம் செய்த முருங்கை இலைக் கீரை – 2 கப்
- தேங்காய்த் துருவல் – அரை கப்
- பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
- பச்சை மிளகாய் – 1 அல்லது 2 (இரண்டு துண்டுகளாக வெட்டியது)
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டுகளாக விருப்பத்திற்கேற்ப நறுக்கியது
- மிளகு தூள் – கால் டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
மல்லுங்கு செய்முறை
முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தேவையான அளவு நீர் விட்டு நன்கு கழுவி வைக்கவும். இதன் பின்னர் ஒரு பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும.
இதை அனைத்தையும் வாசனை வரும் வரை வதக்கினால் போதும். பிறகு கழுவிய கீரையை அதில் சேர்க்கவும். குறிப்பாக, கீரையை நீரே இல்லாமல் சாறு இல்லாத வகையில் சேர்த்தால், மிகச் சுவையான மென்மையான பதத்தில் இருக்கும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து மெதுவாகக் கிளறவும். கீரை சற்றும் வாடாமல், அதே நேரத்தில் வேகவும் செய்ய வேண்டும். ஆகவே, அதனை மூடி வைக்கவும்.
பின் அப்படியே ஒரு 10 நிமிடங்கள் வேகவிடவும். கீரை நன்றாக வெந்து மென்மையடைந்ததும், அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கிளறவும்.
உங்களுக்கு பிடித்தால் மல்லுங்கில் சிறிது வெந்தயம் சேர்த்து வதவதக்குங்கள். இதனால் சுவை கூடும். கலவையில் தேங்காய் கலந்தால் அதன் சுவை மணத்திலே தெரியும். இப்போது சுடச்சுடச் சாப்பிடத் தயார். இப்போது சாதம் இருந்தால் அதையும் சேர்த்து சாப்பிடுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
