Baakiyalakshmi: இது என் வீடு! கோபியை வீட்டை விட்டு அனுப்பும் பாக்கியா! அடுத்து நடக்கவிருப்பது என்ன?

Manchu
Report this article
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியேறக் கூறியதுடன், ஈஸ்வரியும் தனது மகன் கோபியை வீட்டை விட்டு வெவளியே போகக் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.
தற்போது ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த உண்மையை வீட்டில் அனைவரிடமும் போட்டு உடைத்துள்ளார்.
இதனால் குடும்பத்தில் பிரளயமே ஏற்பட்டுள்ளது. கோபியை வீட்டைவிட்டு வெளியேற மகன்கள் கூறிய நிலையில், அவர் திமிராக பேசியுள்ளார்.
பின்பு பாக்கியா நான் சொல்றேன் வீட்டைவிட்டு வெளியே போங்க என்று கூறி அதிரடி காட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |