மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்.... விவாகரத்திற்கு காரணம் என்ன?
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் ஜி.வி.பிரகாஷ். ஜென்டில் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை தனது மழலை குரலில் பாடியிருந்தார்.
பின்பு வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளரான இவர், அடுத்தடுத்து பாடல்களின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பல முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்த இவர், நடிகராகவும் வலம் வந்தார். இவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்றாலும், டார்லிங் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
ஜிவி.பிரகஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து விவாகரத்து செய்யும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |