பளார் என விழுந்த அறை.. வீட்டை விட்டு வெளியேறும் நிலா- திருமணம் நடக்குமா?
விடாமல் தொந்தரவு கொடுக்கும் மாப்பிள்ளையை எதிர்த்து திருமணம் செய்து கொள்ள துணிந்த நிலாவின் செயல் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அய்யனார் துணை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் அய்யனார் துணை.
இந்த சீரியலில், எதிர்நீச்சல் மதுமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அம்மா இல்லாமல் குழம்பி போய் இருக்கும் குடும்பத்திற்கு முதல் மருமகள் வந்து என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதனை கருவாகக் கொண்டு இந்த கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
சிறு வயது முதல் அப்பாவின் பேச்சை தட்டாமல் வளர்ந்து வரும் நிலா, பெரிய பெரிய படிப்புக்களை படித்து விட்டு அதனை நடைமுறை வாழ்க்கையில் செயற்படுத்தாமல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார்.
அதுவும் அவரின் அப்பாவிற்காக தான். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள வந்த மாப்பிள்ளை, நிலாவை மரியாதையுடன் நடத்தவில்லை. அவரின் விருப்பத்திற்கு வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார்.
இது போன்ற விடயங்களை நிலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் எப்படியாவது இந்த திருமணத்தில் இருந்து தப்பிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, அதற்கான வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்.
பளார் என விழுந்த அறை

Baakiyalakshmi: மகனுக்காக செய்த அநியாயம்... ராதிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி... குறித்த சீரியல் முடிகின்றதா?
இந்த நிலையில், எமது சீரியலின் கதாநாயகர் அதே வீட்டில் கார் ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். அவருக்கும் நிலா மீது விருப்பம், ஆனாலும் அவரை இந்த திருமணத்தில் இருந்து எப்படியாவது வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார். இதற்கு நிலா ஒப்புதல் தராமல் இருப்பதால் திருமணத்திற்கான வேலைகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில், மாப்பிள்ளை ஒரு நாள் இரவு முழுவதும் விடாமல் கோல் செய்து நிலாவை தொந்தரவு செய்கிறார். மறுநாள் காலையில் வந்து கோபமாக,“ என்னுடைய கோலை உன்னால் எடுக்க முடியாதா?” என கேட்க, அதற்கு நிலா, “ ஆமா டா எடுக்க முடியது டா, வெளியே போடா..” என திட்டுகிறார்.
இவற்றை பார்த்த நிலாவின் அப்பா பளார் என அறைந்து மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்கும் படி கூறுகிறார். நிலாவும் அப்பாவுக்காக மன்னிப்பு கேட்டு விட்டு வெளியில் வந்து, கதாநாயகரிடம் இன்று திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வெற்றி நடைப்போட்டி கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |