நான் மகான் அல்ல பட குழந்தையா இது? ஹீரோயின்களுக்கு சவால் விடும் அழகு
கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தையின் தற்போதைய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கார்த்தி.
இவர், நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் நான் மகான் அல்ல. இந்த படத்தில் கார்த்திற்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
அத்துடன் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
யார் அந்த குழந்தை?
இந்த நிலையில், நான் மகான் அல்ல திரைப்படத்தில் ஒரு காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தான் கீர்த்தி ஷெட்டி. இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “உப்பென்னா” என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தி வாரியர் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி பை லிங்குவல் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
குழந்தை நட்சத்திரமாக நான் மகான் அல்ல படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி, தற்போது கார்த்திக்கு ஜோடியாகவே வா வாத்தியாரே படத்தில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கீர்த்தி ஷெட்டிக்கு 21 வயது, கார்த்திக்கு 47 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |