திருமணத்துக்கு தயார்... சர்ச்சைக்கு மத்தியில் த்ரிஷா என்ன சொல்லிருக்காங்கன்னு பாருங்க
சர்ச்சைகளுக்கு மத்தியில், நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய சேலையில், புகைப்படத்தை பகிர்ந்து பூமாலையே தோள் சேரவா என்ற பாடலை இணைத்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விவாகரத்து சர்ச்சை
தமிழகத்தில் தேர்தல் நேருங்கும் சமயத்தில், நடிகரும் தவெக கட்சித்தலைவருமாக விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது.

விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், அதனை பறைசாற்றும் வகையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.

அதனால் விஜய்கு சார்பாக நின்ற விஜய் ரசிகர்களில் ஒரு சாரார் உட்பட நெட்டிசன்கள் மற்றும் சினிமா, அரசியல் பிரபலங்களும் இந்த விடயத்துக்கு கடுமையாக கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விடயம் குறித்து ஊடகங்கள் த்ரிஷாவிடம் சென்னை விமானநிலையத்தில் வைத்து கேள்வியயெழுப்ப்பிய போதும், அதனை பொருட்படுத்தாமல் அமைதியாக கடந்துசென்றார். குறித்த காணொளியும் இணையத்தில் வைரலானது.

[XHATCWX ]
இந்நிலையில், நடிகை திரிஷா சில தினங்களுக்கு முன் நடந்த தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு மும்பை சென்றுள்ளார். அங்கு சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பூமாலையே தோள் சேரவா என்ற பாடலை இணைத்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிஷாவுக்கு கல்யான ஆசை வந்துடுச்சு போல என்ற வகையில், கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |