படைகளுடன் திவ்யா வீட்டிற்கு சென்ற அர்னவ்: வீட்டைப் பூட்டிக் கொண்டு பாதுகாப்பு இல்லாமல் பதறும் திவ்யா...
திடீரென வழக்கறிஞர் மற்றும் பவுன்சர்களுடன் திவ்யா வீட்டிற்கு சென்றிருக்கிறார் அர்னவ்.
அர்னவ்-திவ்யா விவகாரம்
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
பிறகு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணம் முடித்து கொஞ்சநாளில் இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் எதையும் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்த திவ்யா பல குற்றச்சாட்டுக்களை வைத்ததால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் அர்னவ்.
பின்னர் கர்ப்பமாக இருந்த திவ்யா அண்மையில் குழந்தையொன்றை பிரசவித்திருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பிரல தொலைக்காட்சில் அர்னவ் மீது பல குற்றச்செயல்களை அடுக்கடுக்காய் ஆதாரத்துடன் பேசியிருந்தார்.
இதற்காக அர்னவ்வும் திவ்யா தான் செய்த குற்றங்களை மறைப்பதற்காக நான் செய்யாத குற்றங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்திருந்தார்.
திவ்யா வீட்டிற்கு சென்ற அர்னவ்
இந்நிலையில் அர்னவ் திவ்யா தங்கியிருக்கும் வீட்டிற்கு வழக்கறிஞர் மற்றும் பவுன்சர்களுடன் சென்றிருக்கிறார்.
இவர் சென்றிருந்த வேளையில் திவ்யா கதவைப் பூட்டிக் கொண்டு அர்னவ்வை வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்.
மேலும், எதற்காக எந்த உரிமையில் என் வீட்டிற்கு வந்தீர்கள் என்னுடைய வழக்கறிஞர் மற்றும் பொலிஸார் என எல்லோரும் வந்தவுடன் தான் கதவை திறப்பேன் அதுவரை திறக்க மாட்டேன் என திவ்யா தெரிவித்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |