சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பாக்கியாவா இது? காணொளியால் வாயடைத்துப்போன ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகை வெளியிட்டுள்ள நடன காட்சியினை அவதானித்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வருபவர் மலையாள நடிகை சுஜித்ரா.
குறித்த சீரியலில் நடுத்தர குடும்ப பெண்களின் வாழ்க்கை நிலை ஒத்துப்போவதாக, காட்சிகள் வருவதால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த சுசித்ரா அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர் சினிமாவில் நடித்திருந்தாலும், சின்னத்திரை மீது ஏற்பட்ட ஆசையினால் தற்போது சீரியலில் நடித்து அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் குறித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள, நடன காணொளியினை அவதானித்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவா இது? என்று பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.