நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லதா?
தற்போது அனைவருக்கும் இருக்கும் மிகப் பெரும் பிரச்சினை என்னவென்றால் நீரிழிவு நோய்தான். வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக கருதப்படும் உணவுகள் காணப்படுகின்றன.
அவற்றுள் முட்டை மிக முக்கியமானது. சரி முட்டையை இனி முட்டையை எதற்காக சாப்பிடவேண்டும் எனப் பார்ப்போம்...
முட்டையில் விட்டமின் ஏ,கே,பி12 என்பவை இருப்பதால் தசை மற்றும் நரம்புகளுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது.
முட்டையில் வெள்ளைப் பகுதியில் 15 கலோரிகளும் மஞ்சள் கருவில் 60 கலோரிகளும் உள்ளதால், வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாம்.
முட்டையில் பயோடின் எனப்படும் தோலுக்கு தேவையான விட்டமினும் மூளை வளர்ச்சிக்கு கோலினும் அதிகளவில் காணப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அதில் கிட்டத்தட்ட 184 கிராம் கொலஸ்ட்ரோல், 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.
ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் முட்டையில் காணப்படுவதால், இது ஒரு முழுமையான புரதமாகும்.
முடியுமானவரை முட்டையை அவித்து உண்பது நல்லது.