உடல் உள்ளுறுப்புகளில் தேங்கியிருக்கும் கொழுப்பை உடனே கரைக்கனுமா? உடனே இதை செய்யுங்க!
நாம் வெளியில் தெரியும் கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சைகள், டயட் உணவு முறைகள் உள்ளிட்டவற்றை முயற்சிக்கின்றோம்.
ஆனால் உள்ளுறுப்பு கொழுப்பு பற்றி கண்டுகொள்வது இல்லை.
உள்ளுறுப்பு கொழுப்பு பற்றியும் நாம் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஒரே வாரத்தில் இத்தகைய கொழுப்பை குறைப்படி எப்படி என்பது குறித்து காணலாம்.
எவ்வாறு கொழுப்பு சேரும்
நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்வதன் மூலமும், மிகக் குறைந்த உடல் செயல்பாடுகள் காரணமாகவும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
சிலருக்கு மரபணு குறைபாடு காரணமாக இத்தகைய கொழுப்பு வயிற்றின் அடியில் அதிகமாக தங்குகிறது.
ஆண்களைப் பொறுத்தவரை மது அருந்துவது, வயது மற்றும் மரபியல் ஆகியவை உள்ளுறுப்பு கொழுப்பை அதிகரிக்கிறது. பெண்களைப் பொறுத்தவரை வயதாகும்போது, மாதவிடாய் நின்ற பிறகு தசை நிறை குறைந்து கொழுப்பு அதிகரிக்கிறது.
இதனால் எடை அதிகரிக்காவிட்டாலும் வயிற்றை சுற்றில் கொழுப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எவ்வாறு கண்டறிவது?
- இது உயர் இரத்த அழுத்தம்
- உடல் பருமன்
- அதிக கொழுப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகிய விளைவுகளை ஏற்படுத்தல்
- பக்கவாதம்
- இதய நோய்
- வகை 2 நீரிழிவு நோய்
- ஆஸ்துமா
- பித்தப்பை நோய்
- கீழ்வாதம்
- கல்லீரல் நோய்
- கீழ்முதுகு வலி
- கருவுறுதல் பிரச்சினைகள்
- புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இப்பிரச்சனையில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
குறைப்பதற்காக எளிய வழிகள்
- உள்ளுறுப்புக் கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த வழி உடல் எடையைக் குறைப்பது மற்றும் உணவுக் கட்டுப்பாடு ஆகும். நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் உடற்பயிற்சி போன்றவற்றை முயற்சிக்கலாம்.
- சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் நாம் எடை குறையலாம்.
- கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவுகளை உண்பவர்களை காட்டிலும், மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி சாச்சுரேட்டட் கொண்ட கொழுப்பு அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்பவர்கள் உடல் எடையை விரைவில் குறைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
- நட்ஸ், மீன், வெண்ணெய், ஆலிவ் போன்ற உணவுப் பொருட்களை எடுப்பது உடல் எடையை பராமரிக்க சிறந்த வழிகளாகும்.
- கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை விட புரத உணவுகளை எடுத்துக் கொள்வது நம் முழுவதுமாக உணர வைக்கும். ஒரு கிலோ உடல் எடையில் 0.8 அளவுக்காவது புரத உணவுகள் இருக்க வேண்டும்.
- அதிகப்படியான சர்க்கரை பானங்களை உட்கொள்வது அதிக கொழுப்புச் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
- 6 மணி நேர தூக்கம் அவசியம். தூக்கமின்மையால் மன ஆரோக்கியம் முதல் நீரிழவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் மட்டுமின்றி உயர் கொலஸ்டிரால் பிரச்சினையும் அதிகரிக்கும்.