நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? குழப்பமான கேள்விக்கு பதில் இதோ
நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.
வாழைப்பழம்
நீரிழிவு நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். காரணம் என்னவெனில் உடம்பில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பாரிய பிரச்சினையை ஏற்படுத்துவதே காரணமாகும்.
மேலும் நீரிழிவு நோயாளிகள் சில பொருட்களை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. அந்த வகையில் வாழைப்பழத்தினை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிடலாம்? என்ற கேள்விக்கான பதிலை இங்கு காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்றும் அவ்வாறு இல்லையெனில் பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் இந்த பழங்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
ஆனால் நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை தினமும் ஒரு வாழைப்பழம் என்ற கணக்கில் பச்சை பழம், செவ்வாழை இவற்றில் ஏதேனும் ஒன்றினை எடுத்துக்கொண்டால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை.
ஆனால் பூவம் பழம், ரஸ்தாலி, நாட்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் அதில் இனிப்பு அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பிரச்சினை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளவும்.
வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும்.
ஆனால் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் வாழைப்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.