ஏஆர் ரஹ்மான் மனைவிக்கு தமிழ் தெரியாதா? நடிகையின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் தரமான பதிலடி
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மனைவிக்கு தமிழ் வராதா எனக் கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி, அதற்கு ஏ.ஆர். ரஹ்மான் ஒரே வார்த்தையில் பதிலளித்த விதம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான்
அண்மையில் விகடன் விருது விழாவில் சென்னையில் இடம்பெற்றிருந்தது. இதில் ரஹ்மானுக்கு 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த பின்னணி பாடகருக்கான விருதும் சிறந்த இசையமைப்பாளக்குமான விருதும் வழங்கப்பட்டது.
இந்த விருதை பெறுவதற்காக தனது மனைவியுடன் மேடைக்கு வந்தார். விருதைப் பெற்றுக் கொண்டு இந்த விருதை எனது மனைவிக்காக சமர்ப்பிக்கிறேன் எனவும் எனது குரலின் முதல் ரசிகை எனது மனைவிதான் என பெருமையாக பேசினார்.
அப்போது அவரது மனைவியை பேச சொல்ல அப்போது இடையில் ரஹ்மான் ஹிந்தியில் மட்டும் பேசாதீங்க என்று சொல்லிய பிறகு ரஹ்மானின் மனைவி தனக்கு தமிழ் சரியாக பேச வராது மன்னிக்கவும் என பேசியிருப்பார்.
ரஹ்மானை சீண்டிய கஸ்தூரி
இந்நிலையில், ரஹ்மானின் மனைவி ஆங்கிலத்தில் பேசியதை வைத்து நடிகை கஸ்தூரி ஒரு பிரச்சினையைக் கிளப்பியிருந்தார்.
அதாவது, ‘என்னது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?’என டுவிட்டரில் கேள்வி எழுப்ப அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கூலாக ‘காதலுக்கு மரியாதை’ என ஒற்றை வார்த்தையில் கஸ்தூரிக்கு பதிலளித்து விட்டார்.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023