ஏ.ஆர்,ரஹ்மானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மழலை மாறாத குழந்தை! என்ன ஒரு திறமை...மெயசிலிர்த்து போன மில்லியன் இதயங்கள்
ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’பாடலை சிறுமி அழகாக பாடும் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது இசை பயணத்தை ரோஜா படத்தின் மூலம் தொடங்கினார்.தனது முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார்.
பின்பு இவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே ஹிட் என்று தான் கூற வேண்டும்.ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.
இந்த நிலையில் மழலை மாறாத குழந்தை , ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை ஹிந்தி மற்றும் தமிழில் அழகாக பாடுகிறது.இந்த பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.