கணவரிடம் விவாகரத்து கேட்டு தினமும் அழுத மனைவி! இளைஞர் கூறிய தரமான பதில்
நீயா நானா நிகழ்ச்சியில் காதலால் உயர்ந்தவர்கள் & காதலை கொண்டு உயர்த்தியவர் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு காதலால் உயர்ந்தவர்கள் & காதலை கொண்டு உயர்த்தியவர் என்பதில் விவாதிக்கப்பட்டது.
ஆம் ஓரிரு தினங்களில் காதலர் தினம் வருவதால் இந்த அட்டகாசமான தலைப்பினை பிரபல ரிவி எடுத்து விவாத பொருளாக மாற்றியுள்ளது. இதில் பெண் ஒருவர் தனது கணவரை விட்டு போக் கூறியுள்ளார். ஆனால் அந்த அப்பாவி கணவன் எதுவும் முடிவு எடுக்காமல் மனைவியுடன் வாழ்ந்து வருகின்றார்.