Numerology: இந்த கலர் ஆடை அணிந்தால் வெற்றி உறுதி.. நீங்க பிறந்த தேதி என்ன?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண்கணிதம்படி, குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் நிறம் உள்ளது. அந்த நிறத்தில் ஆடை அணியும் பொழுது வழக்கத்தை விட அதிர்ஷ்டம் இரட்டிப்பாக கிடைக்கும். அப்படியாயின், எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு, என்ன நிறத்தில் ஆடை அணிந்தால் பலன் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்
1, 10, 19, 28 தேதிகள் | எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் எண் 1 - ல் பிறந்தவர்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஜோதிடத்தின்படி இந்த நான்கு தேதியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் ஆரஞ்சு நிறம் இவர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். |
2, 11, 20, 29 தேதிகள் | 12 மாதங்களில் பிறந்தவர்களில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பச்சை அல்லது வெள்ளி நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். |
3, 12, 21, 30 தேதிகள் | இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்தால் குருவின் செல்வாக்கு கிடைக்கும். இதனால் மங்களம் உண்டாகும். நிலுவையில் உள்ள பணிகள் கூட முடிவுக்கு வரும். |
4, 13, 22 ,31 தேதிகள் | இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் சாம்பல் நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பிறந்தநாள் தவிர பிற நாட்களிலும் இந்த நிறத்தில் ஆடை அணிவது நல்லது. |
5, 14 ,23 தேதிகள் | எண் கணிதத்தின் படி, இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வெளிர் பச்சை மற்றும் நீல நிற ஆடைகளை அணிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். அதே சமயம் செழிப்பும் உண்டாகும். |
6, 15, 24 தேதிகள் | எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் நீல நிறத்தில் ஆடை அணிந்தால் மங்களம் உண்டாகும். இதுவே வெற்றிக்கான வாய்ப்பாக மாறும். |
7, 16, 25 தேதிகள் | எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனின் இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். |
8, 17, 26 தேதிகள் | எண் கணிதத்தின் படி இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் அடர் நீலம், ஊதா அல்லது கருப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மங்களம் உண்டாகும். |
9, 18, 27 தேதிகள் | எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).