பொது இடத்தில் ஆசை மனைவிக்கு ஆர்டர் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்! வயிறு குலுங்க சிரித்த பிரபலங்கள்
பொது நிகழ்ச்சியொன்றில் வைத்து தன்னுடைய ஆசை மனைவிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆர்டர் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் நாயகனின் இசைப்பயணம்
தன்னுடைய இசை பயணத்தை “ரோஜா ” திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த ஏஆர் ரஹ்மானுக்கு, அந்த படம் நினைத்து பார்க்காத வெற்றியை பெற்று தந்து தேசிய விருதும் வாங்கி தந்தது.
இதனை தொடர்ந்து இவரின் பெயர் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
ரஹ்மானுக்கு கோல்டன் க்ளோப் விருதும், இரண்டு ஆஸ்கர் விருதுகளும் கிடைத்தது.
ரஹ்மான் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா , மலேசியா என பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
மனைவிக்கு கவுண்டர் அடித்த ரஹ்மான்
இந்த நிலையில், சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரின் அன்பு மனைவியுடன் கலந்துகொண்டார்.
அப்போது மனைவியை இரண்டு வார்த்தை பேசுமாறு தொகுப்பாளர்கள் கேட்டு கொண்டார்கள். பக்கத்திலிருந்த ரஹ்மான் மனைவியை பார்த்து “தமிழில் பேசுங்க தயவு செய்து ஹிந்தியில் பேசாதீங்க” என கூறியுள்ளார். இதனை கீழிலிருந்த பார்த்த மணிரத்னம், சாய்பல்லவி இருவரும் பயங்கரமாக சிரித்து விட்டனர்.
பிறகு பேசிய ரஹ்மானின் மனைவி, "Sorry, எனக்கு சரியாக தமிழ் பேச வராது இதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். ரஹ்மானின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் குரலை பார்த்து தான் நானே விழுந்து விட்டேன்” புன்னகைத்தப்படி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் தன்னுடைய மனைவிக்காக “மறக்குமா நெஞ்சம்....” என்ற பாடலையும் பாடியுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள்,“ ரஹ்மானின் கவுண்டருக்கு வரவர அளவு இல்லை.” என கூறியுள்ளார்.