chicken 65: ஆந்திரா பாணியில் காரசாரமான சிக்கன் 65... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் சிக்கன் மிக முக்கிய இடத்தை பெற்றுக்கொள்ளும். குறிப்பாக சிக்கன் 65 என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் அட்டகாசமான சுவையில் ஆந்திரா பாணியில் காரசாரமான சிக்கன் 65 எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகள்
தயிர்
கருவேப்பிலை
முட்டை
பச்சை மிளகாய்
சோள மாவு
ஆரஞ்சு சிவப்பு கேசரி பவுடர்
கரம் மசாலா தூள்
இஞ்சி, பூண்டு விழுது
சீரகத் தூள்
மிளகாய்த் தூள்
மிளகுத் தூள்
உப்பு
எலுமிச்சை
எண்ணெய்
கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் முட்டையின் வெள்ளைக் கருவினை மட்டும் பிரித்து எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ஆரஞ்சு கலர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, நறுக்கின சிக்கன் துண்டுகளை அதில் போட்டுப் பிரட்டி ஒரு மணி நேரம் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் தயிர், சிவப்புக் கலர், சீரகத் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலாவில் ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொரித்த துண்டங்களை ஒரு தட்டில் எடுத்து எண்ணெய்யை நன்றாக வடிய விட வேண்டும்
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேரத்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கரைத்து வைத்து உள்ள தயிர் மற்றும் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து சில நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் 65 தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |