Peanut Burfi: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேர்க்கடலை பர்ஃபி
குளிர்காலத்தில் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக காணப்படுகின்றது. இதை நாம் கண்டுகொள்ளாமல் விட கூடாது. அப்படி விடுவதனால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது.
இதை தடுப்பதற்கு உலர் பழங்கள், பச்சைக் காய்கறிகள், உள்ளிட்ட பொருட்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி உணவிவாக சேர்த்துக்கொள்ளும் போது அதை நமக்கு பிடித்த வகையில் செய்து உண்பது மிகவும் நன்மை தரும்.
அந்த வகையில் தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கடலை, வெல்லம், எள் மற்றும் உலர் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பர்ஃபி உதவுகிறது. இதை எப்படி தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1கப் வேர்க்கடலை
- 1 கப் வெல்லம்
- 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
- சிட்டிகை உப்பு
- 2 மேஜைகரண்டி நெய்
செய்யும் முறை
வேர்க்கடலையை முதலில் பொடியாக நறுக்கி எடுத்த வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை சூடாக்கி, வெல்லம் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்து, வெல்லம் உருகி கெட்டியாகும் வரை கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
கையை எடுக்க கூடாது. இதற்கு மரத்தால் செய்யப்பட்ட கரண்டி பயன்படுத்தினால் வெப்பத்தை உள்ளெடுக்காது. பின்னர் பாகு நன்றாக கெட்டியாகும் நேரத்தில் கொதிக்க விட வேண்டும். பின்னர் பாகில் ஒரு துளியை குளிர்ந்த நீரில் விட்டுப் பார்த்து பாகு கூடி விட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பாகு கூடியதும் வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இதை அடுப்பை விட்டு இறக்கி ஒரு தட்டில் நெய் தடவி தயார் செய்த கலவையை பரப்பவும். பின்னர் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பரிமாறலாம். இதை சாப்பிடுவதால் உங்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும்.
வேர்க்கடலை சாப்பிடுவதன் நன்மைகள்
வேர்க்கடலையில் நார்ச்சத்து இருக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும், வயிறு நிறைந்த உணர்வைத் தரவும் உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் நிறையவே உள்ளது.
வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவது, பித்த அமிலங்களின் உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் காரணமாக பித்தப்பை கற்களை தடுக்க உதவும்.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் இதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
இதை தவிர வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறையும். இதன் காரணமாக நரம்புகள் வேகமாக செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |