தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் இயற்கையின் கொடை தான் நெல்லிக்காய்.
இதனை ஏழைகளின் ஆப்பிள் என்றே குறிப்பிடுவார்கள், அந்த அளவுக்கு வைட்டமின் சி நிறைந்தது.
20 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த நெல்லிக்கனியின் பிறப்பிடம் ஆசிய நாடான இந்தியா மற்றும் நேபாள் தான்.
நெல்லிக்கனியின் மகத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய காலத்திலிருந்தே தமிழர்கள் பறைசாற்றி வந்திருக்கிறார்கள்.
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஔவையார், தனது தொண்டினை மேலும் தொடர்வதற்காக அவருக்கு நெல்லிக்கனியை அதியமான் மன்னர் கொடுத்துள்ளார். அதனைத்தான், ““கோன் உயர குடி உயரும்” என்று சொல்வார்கள்.
இதுமட்டுமில்லாமல் புராணங்களின் படி பார்த்தால், தவறுதலாக பூமியின் மீது விழுந்த அமிர்த துளியிலிருந்து உருவானது தான் இந்த நெல்லிக்கனி என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் புத்த மத சங்கத்தினருக்கு அசோக பேரரசர் அளித்த கடைசி பரிசு தான் நெல்லிக்கனி என்று புத்த பாரம்பரியம் தொடர்பான சமஸ்கிருதத்தின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிங்க, சங்ககாலம் புராணக்காலம் போகட்டும், இப்ப இருக்கும் காலத்துல இந்த நெல்லிக்கனியை சாப்பிட்டால், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், விட்டமின் பி1, சி, ஊட்டச்சத்துக்கள் போன்றவை கிடைக்கின்றன.
குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது, நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது.
ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
மின்னல் வேகத்தில் எடை குறைய ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிட வேண்டும்!
மாரடைப்பை தடுக்கும்
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
நம் உடலின் ஒவ்வொரு வளர்சிதை மாற்றத்தின் போது செல்களில் இருந்து நச்சுக்கள் வெளியேறவேண்டும், இது நடைபெறாத பட்சத்தில் உடலில் கட்டிகள் தோன்றி புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும், மேலும் புற்றுநோயை உண்டாக்கூடிய செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
கோடைகாலத்தில் நாவல் பழத்தை சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்
நெல்லிக்காயில் குறைந்த அளவிலேயே சர்க்கரை சத்து இருப்பதால், இதனை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம், இன்சுலின் ஹார்மோன் சுரப்பிற்கும் உதவுகிறது, அல்சர் நோயால் அவதிப்படும் நபர்கள் தினமும் நெல்லிக்கனி சாற்றை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலும்புகள் வலுப்பெறும்
எலும்பின் வளர்ச்சிக்கும், வலுவிற்கும் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் சத்துகளும் நெல்லிக்காயில் அதிகம் இருக்கின்றது.
எனவே வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம்.
குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நெல்லிக்காய்களை சாப்பிட்டு வருவது நல்லது.
நெஞ்சில் தீராத சளியா? அதனை போக்க இதோ அற்புதமான மருந்து
தெளிவான பார்வை
நெல்லிக்கனியின் சாறு, தெளிவான கண்பார்வைக்கு மிகவும் பயன்படுகிறது, குறிப்பாக வயதான காலத்தில் எல்லோருக்கும் ஏற்படுகிற macular degeneration பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான அமைப்பு நன்றாக செயல்பட உதவுகிறது, ஏதாவது உணவினை சாப்பிட்டுவிட்டு அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால் நெல்லிக்காய் சாற்றினை அருந்துங்கள்.
தாறுமாறாக எடையைக் குறைத்த பிரபல நடிகை! எடுத்துக்கொண்ட டயட் என்ன தெரியுமா?
முக அழகுக்கு
ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுகிறது.
இதனை வெயிலில் காயவைத்து பொடி செய்து முகத்தில் பூசி வர முகப்பரு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.
தொடர்ந்து நெல்லிக்காய் சாற்றை அருந்தி வர தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்படும்.
இளநரையை போக்க நெல்லிக்காய் பொடியை நீர்விட்டு குழைத்து தலையில் பூசி வர பலன் கிடைக்கும். நெல்லிக்காய் கலந்த எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தல் நீளமாகவும் பளபளப்பாகவும் வளர்கிறது.
பொடுகு மற்றும் அது சார்ந்த தொல்லைகளை நீக்கவும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி எண்ணற்ற பயன்களை கொண்ட நெல்லிக்காயை அடிக்கடி எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் இளமையாக நீண்ட நாட்கள் வாழலாம்!!!
தலைவலியை நிமிடத்தில் சரிசெய்யும் அற்புத மூலிகை! இதன் மற்ற பயன்கள் தெரியுமா?