தலைவலியை நிமிடத்தில் சரிசெய்யும் அற்புத மூலிகை! இதன் மற்ற பயன்கள் தெரியுமா?
பூக்கள் என்றால் மணம் வீசும், ஆனால் செடியின் இலைகளும் மணம் வீசும் சிறப்பு வாய்ந்தது தான் திருநீற்றுப் பச்சிலை.
உருத்திரச்சடை, பச்சை சப்ஜா, திருநீற்றுப்பச்சை, விபூதிபச்சிலை, திருநீத்துபத்திரி என பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.
அழகான வெள்ளை நிற மலர்களைக் கொண்டிருக்கும். ‘ஆஸிமம் பேசிலிகம்’ (Ocimum basilicum) எனும் தாவரவியல் பெயர்கொண்ட திருநீற்றுப் பச்சிலை, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.
லினாலூல் (Linalool), யுஜெனால் (Eugenol), ஜெரானியால் (Geraniol) ஆகிய தாவர வேதிப் பொருட்கள் இதில் இருக்கின்றன.
முற்காலங்களில் சில பகுதிகளில், திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்பட்டதால் ‘திருநீற்றுப்’பச்சிலை எனும் பெயர் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பயன்கள்
தலைவலி சரியாக
உலகிலேயே மிக கொடுமையான வலிகளில் தலைவலியும் ஒன்று, இதற்காக பலரும் ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றனர், ஆனால் வலி நிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்ளும் பட்சத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும், இதற்கு அற்புதமான தீர்வு தான் திருநீற்றுப் பச்சிலை.
இதன் இலையை வெறுமனே நுகர்ந்து பார்த்தாலே தலைவலி பறந்தோடிவிடும். இதுதவிர இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தான மஞ்சள் டீ
காய்ச்சல் குணமாக
இதனுடைய முழுத்தாவரத்தையும் சுத்தம் செய்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் வியர்வை வெளியேறுவதுடன் காய்ச்சல் சரியாகும்.
நம் உடலும் கனமாக உணர்விலிருந்து விடுபட்டு, லேசான உணர்வுடன் புதிதாக பிறந்ததை போன்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
வாயுப் பிரச்சனைகள் அடியோடு ஒழிய
பலரும் சந்திக்கும் தர்மசங்கடமான நிலையே வாயுப் பிரச்சனை, இதை வெளியே சொல்லவே நமக்கு சங்கடமாக இருக்கும், எதையும் விரும்பி சாப்பிடவும் முடியாது.
இப்படி வாயுப்பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதன் இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.
வெந்நீருடன் ஒரே ஒரு துளி தேன் எடை தாறுமாறாக குறையும்!
காது வலி சரியாக
காது வலியால் அவதிப்படும் நபர்கள், காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இதன் இலைச்சாற்றை சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
இதன் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.
தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
மலச்சிக்கல் சரியாக
திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள், இந்த விதைகளை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
அத்துடன் வெயில் காலத்தில் மலச்சிக்கல் இல்லாமல் மலத்தை வெளியேற்றிவிடும்.
இதேபோன்று 5 கிராம் சப்ஜா விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல், நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்.
உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள்
உடல் நறுமணத்துடன் இருக்க
நீங்கள் குளிக்கும் நீரில் அரைமணி நேரத்துக்கு முன்பே ஒரு கைப்பிடி அளவு திருநீற்றுப் பச்சிலையின் இலைகளை எடுத்து நீரில் நனைத்து குளித்து வந்தால் உடல் நறுமணமாக இருக்கும்.
கண்கட்டிகள் சரியாக
வெயில் காலங்களில் பலரும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள், உடல் சூட்டின் காரணமாக கண் கட்டி, கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் வடியும்.
அப்படி கண்கட்டியால் அவதிப்பட்டு வந்தால், இதன் இலையை அரைத்து கண்களின் மீது பற்று போடவும். சாறு உலர்ந்ததும் மீண்டும் கண் கட்டிகள் மீது மீண்டும் சாறு தடவி விடவும்.
தொடர்ந்து கட்டிகள் மீது பூசி வந்தால் கட்டிகள் சரியாகிவிடும்.
மறந்தும் கூட டீயுடன் நான்கு பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க!
சரும நோய்களுக்கு
முகப்பரு தீவிரமாக இருப்பவர்கள், திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு பொடியை கலந்து குழைத்து பருக்களில் பூசி வர முகப்பரு குணமாகும், முகப்பருவால் உண்டான தழும்புகளும் மறையும்.
தேமல், படை முதலிய சரும நோய்கள் இருந்தால் இதன் இலைச்சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர சரியாகும்.